அடுத்த பரபரப்பு... காங்கிரஸிலிருந்து விலகிய ராதிகா கேரா பாஜகவில் இணைந்தார்!

அடுத்த பரபரப்பு... காங்கிரஸிலிருந்து விலகிய ராதிகா கேரா பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் ராதிகா கேரா இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், ராதிகா கேரா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. மேலும் அவர் காங்கிரஸ் கட்சி குறித்து பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் பாஜக ஊடகத் துறை பொறுப்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் ராதிகா கேரா, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார்.

ராதிகா கெரா
ராதிகா கெரா

பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய ராதிகா கேரா, “ராமர் பக்தையான நான் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற காரணத்துக்காக கவுசல்யா மாதாவின் மண்ணில் என்னை வசை பாடினர். துஷ்பிரயோகத்துக்கு ஆளானேன், என்னை அறையில் வைத்து அடைத்தனர். ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் என்னை சரியான நேரத்தில் காக்கவில்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. இப்போது இருப்பது மகாத்மா காந்தியின் காங்கிரஸ் இல்லை, இந்துக்களுக்கு எதிரான காங்கிரஸ்” என தெரிவித்தார்.

ராதிகா கெரா
ராதிகா கெரா

முன்னதாக காங்கிரஸிலிருந்து கடந்த ஞாயிறு அன்று விலகிய கேரா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ காங்கிரஸ் கட்சி ராமருக்கு எதிரானது, சனாதனத்திற்கு எதிரானது, இந்துக்களுக்கு எதிரானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நான் நம்பவே இல்லை. மகாத்மா காந்தி ஒவ்வொரு கூட்டத்திலும் 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்று கூறி தனது உரையை தொடங்குவார். நான் என் பாட்டியுடன் ராமர் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்து திரும்பியதும், என் வீட்டு வாசலில் 'ஜெய் ஸ்ரீராம்' கொடியை ஏற்றினேன். இதனால் காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கத் தொடங்கியது. இதுபற்றி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடும் போதெல்லாம், தேர்தல் பணிகள் நடக்கும் சமயத்தில் ஏன் அயோத்திக்கு சென்றீர்கள்? என்று என்னைத் திட்டினார்கள். காங்கிரஸ் கட்சியின் இந்து எதிர்ப்பு சித்தாந்தத்தை நான் பின்பற்றாததால் கட்சி தலைமை என்னை புறக்கணித்தது” என்று தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in