பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை!

இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து குதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரோஹித் கிஷோர் குர்பானி. இவர் வேலை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு இடம்பெயர்ந்தார். கடந்த 2015 முதல் மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் ரோஹித். கடந்த சில வாரங்களாக ரோஹித், யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நண்பர்கள் கேட்டபோது, ஒன்றுமில்லை என்று சமாளித்து வந்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்நிலையில், மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனைக்கு எதிரே உள்ள டோபஸ் பிளாசாவின் மொட்டை மாடிக்கு நேற்று மாலை ரோஹித் சென்றுள்ளார். கட்டடத்தின் விளிம்பு பகுதியில் நின்றிருந்த அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அக்ரிபாடா போலீஸார், சடலத்தை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ரோஹித் தற்கொலை செய்துக் கொண்ட கட்டடத்தின் எதிரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள வீடியோவில், ரோஹித்தின் தற்கொலையைப் பார்த்து பெண் ஒருவர், அதிர்ச்சிக்குள்ளாகி கத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ரோஹித்திற்கு மனநல பிரச்சினை இருந்ததாகவும், இதுபோல முன்பு தற்கொலை முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in