காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபான கடையில் காலாவதியான பீரை வாங்கி அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (31) மற்றும் சார்லஸ் (27). நண்பர்களான இருவரும் நேற்று பிற்பகல் மது அருந்துவதற்காக சென்று உள்ளனர். தென்னலக்குடியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் டின் பீர்களை வாங்கி அருந்தி உள்ளனர். இருவரும் வீட்டிற்கு சென்ற நிலையில் சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக இருவரும் மருத்துவமனையில் அனுமதி
சிகிச்சைக்காக இருவரும் மருத்துவமனையில் அனுமதி

இதனால் இருவரையும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் அருந்திய பீர் காலாவதியாகி இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அருந்திய பீர் டின்களை சோதனை செய்த போது அந்த கேன்கள் கடந்த ஜனவரி மாதமே காலாவதி ஆகிவிட்டது தெரியவந்தது.

சீர்காழி அரசு மருத்துவமனை
சீர்காழி அரசு மருத்துவமனை

இது தொடர்பாக தென்னலக்குடி டாஸ்மாக் கடையில் உறவினர்கள் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in