ஆளை விடுங்கப்பா... பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

சுசரிதா மொஹந்தி
சுசரிதா மொஹந்தி

ஒடிசாவின் பூரி மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொஹந்தி, கட்சியிடமிருந்து போதிய பிரச்சார நிதி வரவில்லை என்று போட்டியில் இருந்து விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் பூரி மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொஹந்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கட்சியிடமிருந்து போதிய பிரச்சார நிதி இல்லை எனக் கூறி தனது சீட்டை கட்சியிடமே திருப்பி ஒப்படைத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்குங்த தேவையான நிதியை கட்சியால் வழங்க இயலாதது குறித்து தனது ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

சமீபத்தில் தனது தேர்தல் முயற்சிக்கு நிதியளிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளை கோரி, க்ரூட் ஃபண்டிங் பிரச்சாரத்தை சுசரிதா மொஹந்தி தொடங்கினார். அவர் தனது சமூக ஊடக தளங்களில் க்யூஆர் குறியீட்டைப் பகிர்ந்தார். நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டதால், கட்சி தனக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபாலுக்கு, சுசரிதா மொஹந்தி எழுதியுள்ள கடிதத்தில், “கட்சி எனக்கு நிதி மறுத்ததால் பூரி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏஐசிசி ஒடிசா பொறுப்பாளர் டாக்டர் அஜோய் குமார் என்னை நானே தற்காத்துக் கொள்ளுமாறு திட்டவட்டமாக கேட்டுக் கொண்டார்.

சுசரிதா மொஹந்தி
சுசரிதா மொஹந்தி

நான் ஒரு சம்பளம் வாங்கும் தொழில்முறை பத்திரிகையாளராக இருந்தேன், 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அரசியலில் நுழைந்தேன். பூரியில் எனது பிரச்சாரத்திற்கு என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ளேன். முற்போக்கு அரசியலுக்கான எனது பிரச்சாரத்திற்கு ஆதரவாக பொது நன்கொடை இயக்கத்தை நான் முயற்சித்தேன். நான் திட்டமிடப்பட்ட பிரச்சார செலவினங்களை குறைந்தபட்சமாக குறைக்க முயற்சித்தேன்,

ஆனால், என்னால் சொந்தமாக நிதி திரட்ட முடியாததால், பூரி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்யத் தேவையான கட்சி நிதியை வழங்குமாறு வலியுறுத்தி, உங்கள் மற்றும் எங்கள் கட்சியின் மத்திய தலைமையின் அனைத்து கதவுகளையும் தட்டினேன். நிதி நெருக்கடி, பூரியில் வெற்றி பெறும் பிரச்சாரத்தில் இருந்து எங்களைத் தடுத்து நிறுத்துகிறது,” என்று கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இந்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in