புதுச்சேரி பட்ஜெட்... ஒரே நாள் கூட்டமும் ஒரு மணி நேரத்தில் முடிந்த விநோதம்!

ஒரு மணி நேரம் மட்டும் நடந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்...
ஒரு மணி நேரம் மட்டும் நடந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்...

புதுச்சேரி சட்டப்பேரவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஒரே நாள் கூட்டமும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். பேரவையில் முதலாவதாக முன்னாள் அமைச்சர் ப.கண்ணன், வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பங்காரு அடிகளார், கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா, தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.4,634 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்
ரூ.4,634 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

இதையடுத்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதத்திற்கு அரசின் செலவினங்களுக்காக 4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பேரவையை சபாநாயகர் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார்.

முன்னதாக பேரவையில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, ”மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் ரங்கசாமிக்கு உள்ளது. ஆனால் அவரை சார்ந்துள்ள கட்சியினர் சிலை வைக்கக் கூடாது என தடையாக உள்ளனர். நாங்கள் எங்கள் சொந்த இடத்தில் கலைஞரின் சிலையை வைப்போம், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அஞ்சலிக்கு சபாநாயகர் வரவில்லை. பெயருக்காக அமைச்சர் ஒருவர் வந்தார்” என தெரிவித்தார்.

முழு பட்ஜட் தாக்கல் செய்யாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
முழு பட்ஜட் தாக்கல் செய்யாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

மேலும், ”புதுச்சேரியின் வரவு செலவு என்ன என்று அரசுக்கு தெரியும். இருந்தபோதிலும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு ஏன் முன்வரவில்லை. முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புக் கிடைத்தும் அலட்சியமாக, கோஷ்டி பூசல் காரணமாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. குறைந்தபட்சம் 3 நாட்களாவது பேரவையை நடத்தாது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்எல்ஏ-க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


விவசாயிகள் திடீர் முடிவு... 'டெல்லி சலோ' போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம்?... திமுக நாளை கலந்தாலோசனை!

குட்நியூஸ்... பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு நாளை முதல் ஆதார் பதிவு!

கைது நடவடிக்கைக்கு பயந்து, இரவு முழுவதும் கட்சி அலுவலகத்தில் தங்கிய காங்கிரஸ் தலைவர்!

50 லட்சம் பக்தர்கள் தரிசனம்... அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in