பேரரசர் நரேந்திர மோடிக்கு பெண்களின் நிலை எப்படி தெரியும்... இளவரசர் என ராகுலை விமர்சித்ததற்கு பிரியங்கா பதிலடி!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

மாளிகைகளில் வசிக்கும்  பேரரசர் மோடிக்கு  விவசாயிகள் மற்றும் பெண்களின் நிலை குறித்து எப்படி தெரியும் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.  அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடாதது குறித்து விமர்சித்த பிரதமர் மோடி, "கடந்த 2019 தேர்தலில் அமேதியில் தோல்வியடைந்ததால், இந்த முறை இளவரசர் (ராகுல் காந்தி)  ரேபரேலிக்கு தப்பிவிட்டார்" என்று விமர்சித்திருந்தார். 

இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில்  இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

"பிரதமர் மோடி ராகுல் காந்தியை 'இளவரசர்' என்று விமர்சிக்கிறார். எனது சகோதரர் ராகுல் காந்தி நான்காயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆனால், 'பேரரசர்' நரேந்திர மோடி மாளிகைகளில் வசித்து வருகிறார். அவருக்கு விவசாயிகள் மற்றும் பெண்களின் நிலை குறித்து எப்படி தெரியும்?

பிரதமர் மோடி அதிகாரத்தால் சூழப்பட்டுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் அவரைப் பார்த்து பயப்படுகின்றனர். யாரும் அவரிடம் எதுவும் சொல்வது கிடையாது. யாராவது குரல் எழுப்பினால், அவர்களது குரல் நசுக்கப்படும்.  அவர் எப்போதும்  மிகப்பெரிய மனிதர்களுடன் மட்டுமே இருக்கிறார். 

அவர் விவசாயிகளிடம் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வர்கள்   உயிரிழந்தனர். ஆனால் பிரதமர், அவர்களை நேரில் சென்று பார்க்கவேயில்லை. தேர்தல் வரும்போது வாக்குகளை பெறுவதற்காக சட்டங்களை மாற்றுகிறார்" என்று பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in