மொத்தமாக திருச்சிக்கு வந்த தபால் வாக்குகள்... தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி!

திருச்சியில் தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்
திருச்சியில் தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் ஒரே இடத்தில் இருந்து அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி திருச்சியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின் போது தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை தபால் வாக்குகள் மூலம் செலுத்துவர். அவை அனைத்தும் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது இதில் புதிய மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

திருச்சியில் தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்
திருச்சியில் தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

புதிய நடைமுறைப்படி, தமிழ்நாடு முழுவதும் பதிவாகும் தபால் வாக்குகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து தொகுதிவாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அவை அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் பதிவான தபால் வாக்குகள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 39 தொகுதிகளை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை பிரித்து எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி

இந்த பணி இன்று காலை தொடங்கி இரவு வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியை திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in