அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

'தங்கலான்’ விக்ரம்
'தங்கலான்’ விக்ரம்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நடிகர் விக்ரமுக்கு, பிறந்தநாள் ஸ்பெஷலாக வீடியோ வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறது ‘தங்கலான்’ படக்குழு. இவ்வளவு அசுரத்தனமான உழைப்பா? என்றும் கண்கலங்க வைத்திருப்பதாகவும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் வெளியாக உள்ளது. கர்நாடகாவின் கோலார் தங்கவயலை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. உடல் இளைத்து, ஆளே அடையாளம் தெரியாதபடிக்கு தோற்றத்தை மாற்றினார் நடிகர் விக்ரம். படத்திற்காக நடிகர் விக்ரம் எந்தளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் தன் தோற்றத்தை மாற்றி அதிரடி காட்டியுள்ளார் என ஸ்பெஷல் வீடியோவை விக்ரமின் 58வது பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ளது படக்குழு.

தகிக்கும் நெருப்புக்கு மத்தியில் கண்ணீரோடும், ஆக்ரோஷத்தோடும் வெளிவரும் விக்ரம் அடிக்கும் வெயிலில் பாறைகள், வயல்கள் என அடுத்தடுத்து ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பதை இந்த மேக்கிங் வீடியோவில் காட்டி இருக்கிறார்கள்.

விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடிகர்கள் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்து படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த வருடத்தின் பிற்பாதியில் ‘இந்தியன்2’, ‘GOAT', 'வேட்டையன்’, ‘புஷ்பா2’ ஆகிய படங்கள் வரிசைக்கட்டி வருகின்றன.

தங்கலான் படத்தில் விக்ரம்
தங்கலான் படத்தில் விக்ரம்

இந்தப் படங்களோடு ‘தங்கலான்’ மோதுமா அல்லது தனியாக வெளியாகுமா என்பது தெரியவில்லை. விக்ரம் பிறந்தநாளுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in