40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

சினிமாவில் நடிகர், நடிகைகள் என்றாலே பெரும்பாலும் லேட் மேரேஜ்தான். ஆனால், 40+ ஆகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் தென்னிந்திய சினிமாவின் பேச்சுலர் ஹீரோஸ் இவங்கதான்!

நடிகர் விஷால்:

நடிகர்  விஷால்
நடிகர் விஷால்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் மற்றொரு ஹீரோ விஷால். 46 வயதாகும் விஷால் தென்னிந்திய நடிகர்கள் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் எனச் சொல்லி வருகிறார். இதற்கு முன்பு வரலக்‌ஷ்மி, லட்சுமி மேனன் என உடன் நடித்த பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், அனிதா என்பவருடன் இவருக்குத் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால், அது பிரேக்கப் ஆக மீண்டும் பேச்சுலராக வலம் வருகிறார் விஷால்.

நடிகர் பிரபாஸ்:

’பாகுபலி’ ஹீரோவுக்கு 44 வயதானாலும் இன்னும் எலிஜிபிள் பேச்சுலர்தான். ‘பாகுபலி’ படம் மூலம் பான் இந்தியா ஹீரோ ஆனவர் ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதி புருஷ்’ எனத் தொடர்ந்து பான் இந்திய மோகத்தில் சிக்கி தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார் பிரபாஸ். அனுஷ்காவுடன் சீக்கிரம் திருமணம் என செய்திகள் அடிபட்டாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாது ‘கல்கி 2898 ஏடி’ மூலம் பான் வேர்ல்ட் படத்திற்குத் தயாராகி வருகிறார் பிரபாஸ்.

நடிகர் சிலம்பரசன்: 

’40 வயசுதானே ஆச்சு, என்ன அவசரம்?’ என பொறுப்பாகப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. நயன்தாராவுடன் காதல் பிரேக்கப், ஹன்சிகா, நிதி அகர்வாலுடன் கிசுகிசு என சர்ச்சை நாயகனாக வலம் வந்த சிம்பு, ‘இப்போ நான் சினிமாவை மட்டும்தான் லவ் பண்றேன்’ எனச் சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருகிறார். இவரது அப்பா டி.ஆர். “சிம்புவுக்குத் திருமணம் நிச்சயம்; இந்த வருடத்திற்குள் நடத்தி வைப்பது லட்சியம்” எனச் சொல்லி வருகிறார்.

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி:

கன்னட சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி. 40 வயதாகும் இவருக்கு, முன்பு நடிகை ராஷ்மிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது பிரேக்கப் ஆக, இருவரும் தற்போது தங்கள் கரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

x
காமதேனு
kamadenu.hindutamil.in