‘முஸ்லீம்களை குறிவைத்து ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகள் கொண்டவர்கள் என்று சொன்னேனா?’ பிரதமர் மோடி புது விளக்கம்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

’குஜராத் கோத்ரா கலவரத்துக்குப் பின்னர் முஸ்லிம்கள் மத்தியில் தனது இமேஜை எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே கெடுத்துவிட்டதாக’ புகார் தெரிவித்த பிரதமர் மோடி, ‘முஸ்லீம்களை குறிவைத்து ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகள் கொண்டவர்கள் என்று சொன்னேனா?’ என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் புது விளக்கம் தந்துள்ளார்.

தேசிய ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், தான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியலை நாடுவதில்லை என்று தெரிவித்துள்ளார். பேட்டியின் அங்கமாக, ​​’மோடி முஸ்லீம்களுக்கானவர் அல்ல’ என்ற சிலரின் பார்வையை உங்களால் போக்க முடிந்ததா என்று பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த மோடி ’பல ஆண்டுகளாக தனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் இருப்பதாகவும், அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே தனக்கு எதிரான மனநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும்’ தெரிவித்தார்.

இஸ்லாமியருடன் மோடி
இஸ்லாமியருடன் மோடி

"இந்தப் பிரச்சினை முஸ்லீம்களைப் பற்றியது அல்ல. ஒரு தனி முஸ்லீம் என்னை எவ்வளவு ஆதரித்தாலும், அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கருத்தியல் பார்வை உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் முடிவுகளை எடுக்கிறார்கள்" என்று மோடி கூறினார். குஜராத்தில் தான் வளரும் போது, ​​பல இஸ்லாமிய குடும்பங்கள் தனது சுற்றுப்புறத்தில் வசித்து வந்ததை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

"நாங்கள் ஈத் பெருநாளை கொண்டாடுவோம். உண்மையில், ஈத் அன்று, எங்கள் வீட்டிற்கு அனைத்து முஸ்லீம் குடும்பங்களிலிருந்தும் உணவு வரும்.முஹரம் ஊர்வலத்தின் போது, ​​​​தாசியாவின் கீழ் நாங்கள் கடந்து செல்வோம். எங்கள் வளர்ப்பில் இவை அனைத்தும் எங்களுக்கு கற்பிக்கப்பட்டன" என்று அவர் தெரிவித்தார். ஆனால் "2002 கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு எனது இமேஜ் கெட்டுப் போனது. இதை ஆழமாகப் புரிந்துகொள்ள பின்னர் முயற்சித்தேன்” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி தனது அண்மை தேர்தல் பிரச்சார உரை ஒன்றில் ’முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் மற்றும் அதிக குழந்தைகளை கொண்டவர்கள்’ என்று ஏன் குறிப்பிட்டார் என்ற கேள்வியும் ’நியூஸ் 18’ தொலைக்காட்சிக்கான பிரத்யேகப் பேட்டியின் ஊடே கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தான் குறிவைத்து பேசவில்லை என்றார்.

"எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் ஏன் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற கருத்துக்களைக் கட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு ஏன் இத்தகைய அநீதி? நம் நாட்டில், ஏழைக் குடும்பங்கள் அதிக குழந்தைகளைக் கொண்டிருக்கின்றன. அவர்களால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எந்த சமூகத்திலும், ஏழைகளுக்கு அதிக குழந்தைகள் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது "நான் ஒருபோதும் இந்துக்கள் அல்லது முஸ்லீம்களை குறிப்பாக பேசவில்லை. மக்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்; உதவிக்காக அரசாங்கத்தை நம்பக்கூடாது என்றுதான் கூறினேன்" என புதிய விளக்கத்தை வழங்கினார்.

தேர்தலில் முஸ்லிம்கள் தமக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்விக்கு, ’இந்திய மக்கள் எப்போதும் தனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புவதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்து-முஸ்லிம் என்ற அரசியலை நிராகரித்தார். ’இந்து-முஸ்லிம்' அரசியலில் ஈடுபடும் நாளில், நான் பொது வாழ்வில் இருக்கத் தகுதி பெறமாட்டேன்’ என்று உறுதியாக தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in