“மன்னிப்பு கேட்க வந்திருக்கிறேன்...” சரத் பவார் உருக்கம்!

அமராவதி தொகுதியில் சரத் பவார் பிரச்சாரம்
அமராவதி தொகுதியில் சரத் பவார் பிரச்சாரம்

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு மக்களுக்காக என்ன செய்தது என்பதை பற்றி பேசாமல் மற்றவர்களை விமர்சிக்க மட்டுமே செய்கிறார் என தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியில் மகா விகாஸ் அகாதி கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) தலைவருமான சரத் பவார் பேசும் போது, ”முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நாட்டிற்கான பங்களிப்பை கேள்விக்குள்ளாக்க முடியாது. சில பாஜக தலைவர்கள் அரசியலமைப்பு சாசனத்தை மாற்றுவது பற்றி பகிரங்கமாக பேசினர். இந்தியாவில் எதேச்சதிகாரம் உருவாக அனுமதிக்க கூடாது. பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பின்பற்றி அச்சத்தை ஏற்படுத்த முயன்றார்.

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி
ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

2019 தேர்தலில் செய்த தவறுக்காக அமராவதி மக்களிடம் மன்னிப்பு கேட்க வந்துள்ளேன். கடந்த தேர்தலில் நான், நவ்நீத் ராணாவை தேர்ந்தெடுக்க வேண்டுகோள் விடுத்தேன். அதன்பேரில் மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர். அந்த தவறை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் வரையிலான அனைத்துப் பிரதமர்களும் பணியாற்றியதை நான் பார்த்தேன். அவர்களின் முயற்சிகள் புதிய இந்தியாவை உருவாக்குவதாக இருந்தது. ஆனால் தற்போதைய பிரதமர் விமர்சனம் மட்டுமே செய்கிறார்.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என்பதைச் சொல்வதற்குப் பதிலாக, அவர் (மோடி) மற்றவர்களை விமர்சித்து வருகிறார். இந்தியாவில் புதிய புதின் உருவாகிவிடுவாரோ என அஞ்சுகிறோம்” என்றார்.

அமராவதி மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பல்வந்த் வான்கடேவுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக நவ்நீத் ராணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இவர் அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in