ராஜஸ்தானில் முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும் ஓவைசி கட்சி; கலக்கத்தில் காங்கிரஸ்!

ஓவைசி
ஓவைசி

ராஜஸ்தான் மாநிலத்தில் 13 தொகுதிகளில் ஓவைசியின் கட்சி வேட்பாளர்களை களமிறக்கி இருப்பதால் காங்கிரஸ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இம்மாநிலத்தில் பாஜக முஸ்லிம் ஒருவரை கூட வேட்பாளராக நிறுத்தாமல் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கும் என்கின்றன பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தி, ராஜஸ்தான் காங்கிரஸில் ஓயாத உட்கட்சி பூசல்தான் காங்கிரஸின் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

அசோக் கெலாட் ராகுல் காந்தி 
சச்சின் பைலட்
அசோக் கெலாட் ராகுல் காந்தி சச்சின் பைலட்

ஒருவேளை ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தாலும் சுமார் 80% முஸ்லிம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளும் என்பதும் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். ஆனால் இதனை சிதறடிக்கும் வகையில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முஸ்லிம், தலித் வாக்குகளை குறிவைத்து ஓவைசி கட்சி போட்டியிடுவது காங்கிரஸை கதிகலங்க வைத்திருக்கிறது.

தெலங்கானா மாநில கட்சியான ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி, ராஜஸ்தானில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறது. ராஜஸ்தான் முஸ்லிம் வாக்காளர்கள் இதுவரை காங்கிரஸ் பக்கம் இருந்தனர். ஆனால் ஓவைசி கட்சியோ முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் சமூக பெரியவர்கள் என செலக்டிவ் பார்முலாவில் ராஜஸ்தானில் களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸுக்கா? ஓவைசி கட்சிக்கா? என்கிற குழப்பத்துக்கு இயல்பாகவே தள்ளிவிடப்பட்டுள்ளனர்.

அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசி

மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜமீல் கான் ஹவா மஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு மொத்தம் 2.6 லட்சம் வாக்காளர்கள். இவர்களில் முஸ்லிம் வாக்காளர்கள் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமாகும். இன்னொரு பக்கம் பாஜக இம்முறை ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. இத்தனைக்கும் 2018 தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராக யூனுஸ் கானை நிறுத்தியிருந்தது. தற்போதைய தேர்தலில் அவருக்கும் சீட் கொடுக்க மறுத்துவிட்டது பாஜக. இதனால் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார் யூனுஸ் கான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in