தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் பாஜகவில் இணைந்துவிடுவார்... அடித்துச் சொல்லும் ஜெயக்குமார்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாகி விடுவார். பாஜக தவிர எந்த கட்சி வந்தாலும் அதிமுக கூட்டணிக்கு ஏற்றுக் கொள்ளும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் அருகே தனியார் மண்டபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் அமைப்புகளுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்
அதிமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”பாஜகவுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்து வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ் பாஜகவில் இணைந்து விடுவார். பாஜகவுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அதிமுகவைப் பொறுத்தவரையில் பெரிய கூட்டணி, மகத்தான கூட்டணி அமையும். தமிழகத்தில் பாஜக இல்லாத கூட்டணி தான் அமையும். பாஜக தவிர்த்து யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை. அதிமுகவை நோக்கியே கட்சிகள் வரும்” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு

மேலும், “திமுக சார்பாக தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார். 4 சுவற்றுக்குள் இருந்து கொண்டு மனுக்களை பெற்று வருகிறார். அதிமுகவை போன்று ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்கவில்லை. மக்கள் எங்களிடம் மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களைத் தடுத்து வருகின்றனர். 17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக, இதுவரை என்ன தமிழகத்துக்கு செய்தது?. அதிமுக மாநில உரிமைக்காக பாடுபட்டது. ஆனால், கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக. எல்லை தாண்டி மீன்பிடித்தது தொடர்பான கைதுகள் குறைவாகவே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. அதிமுகவை கண்டு இலங்கை அரசிற்கு அப்போது பயம் இருந்தது” என்றார்.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித் ஷா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும். சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதை அதிமுக எதிர்க்கும். பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டுள்ள இந்தியாவில், பொது சிவில் சட்டத்தை அனுமதிக்க முடியாது. அண்ணாமலை பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டு வருகிறார். அவரின் கருத்துகள் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக பல் குறித்து கூற வேண்டாம் என நினைக்கிறேன். அதிமுகவைப் பொறுத்த மட்டில் திமுகவும் பகையாளி, பாஜகவும் பகையாளி” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in