எதிர்க்கட்சிகள் மக்களின் வங்கிக் கணக்குகளை மூடிவிட்டு, பணத்தை பறித்துவிடுவார்கள்... பிரதமர் மோடி பேச்சு!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி
Updated on
2 min read

தனது ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட 50 கோடிக்கும் அதிகமான ஜன்தன் வங்கிக் கணக்குகளை எதிர்க்கட்சிகள் மூடிவிட்டு பணத்தை பறித்துவிடுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “ 50 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு ஜன்தன் கணக்குகளை மோடி தொடங்கினார். ஆனால், எதிர்க்கட்சியினர் உங்கள் வங்கிக் கணக்கை மூடிவிட்டு உங்கள் பணத்தை பறித்துவிடுவார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் மோடி மின்சாரம் கொண்டு வந்தார், இவர்கள் மீண்டும் மின் இணைப்பை துண்டித்து இருளை உருவாக்குவார்கள். மோடி வீடு வீடாக தண்ணீர் தருகிறார், சமாஜ்வாதி-காங்கிரஸ் ஆட்கள் உங்கள் வீட்டின் தண்ணீர் குழாயைத் திறந்து எடுத்துச் சென்றுவிடுவார்கள், இதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மோடி ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகளை கொடுத்தார், இப்போது சமாஜ்வாதி-காங்கிரஸ் கட்சியினர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அவர்கள் உங்களிடமிருந்து இந்த 4 கோடி வீடுகளின் சாவியை எடுத்து, தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுப்பார்கள்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், இன்று சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் பிரதமர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு பிரியாணி ஊட்டப்படும். உத்தரப் பிரதேச மக்களவை தேர்தலில் "இரண்டு பையன்களின் ஜோடி ( அகிலேஷ்- ராகுல்)" மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாதவர்கள் ஒன்று கூடி மோடியை தடுக்க உள்ளனர். அதே பழைய ஃப்ளாப் படம், அதே பழைய கதாபாத்திரங்கள், அதே பழைய டயலாக்குகள். மொத்த தேர்தலும் முடிவடைய உள்ளது. ஆனால் இவர்களிடம் இருந்து ஒரு புதிய விஷயத்தையாவது கேட்டீர்களா?. இளவரசர்கள் இருவரும் வளர்ச்சி சம்பந்தமாக எதுவும் சொல்லவில்லையே? ஏன் இவர்கள் ஓட்டு கேட்கிறார்கள்?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மக்கள் சமாஜ்வாதி - காங்கிரஸ் மேடையை நோக்கி விரைந்த சில வீடியோக்களை நான் பார்த்தேன். எனவே, இது என்ன என்று கேட்டேன். காங்கிரஸும், சமாஜ்வாதி கட்சியும் தங்கள் பேரணிகளில் கலந்துகொள்ள மக்களுக்கு பணம் தருவதாக என்னிடம் கூறப்பட்டது. அவர்கள் மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை, எனவே மக்கள் மேடைக்கு விரைந்தனர். அவர்களின் நிலைமை இப்படி இருந்தால், அவர்கள் உங்களுக்கு எப்படி வேலை செய்வார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in