குஜராத் தேர்தல் நிலவரம்... தலா 4 பெண்களுக்கு மட்டுமே சீட் வழங்கிய பாஜக, காங்கிரஸ் கட்சிகள்!

அரசியலில் பெண்கள்
அரசியலில் பெண்கள்

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் 4 பெண்களுக்கு மட்டுமே சீட் வழங்கியுள்ளதால், தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தலா 4 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளன. அம்மாநிலத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் பாஜக 6 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

இந்நிலையில் இந்தத் தேர்தலில் 2 பேரை குறைத்து, 4 பெண் களுக்கு மட்டுமே பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பூனம்பென் மாடம் ஜாம்நகர் தொகுதியிலும், ஷோபனா பரையா சபர் காந்தா தொகுதியிலும், நீமு பம்பானியா பாவ்நகர் தொகுதியிலும், ரேகா பென் சவுத்ரி பனாஸ்கந்தா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதில், வடக்கு குஜராத்தில் உள்ள பனாஸ்கந்தா தொகுதியில் பாஜக பெண் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பெண் வேட்பாளர் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் பாஜகவும், காங்கிரஸும் ஒருவரையொருவர் எதிர்த்து பெண் வேட்பாளர்களை நிறுத்திய ஒரே நிகழ்வு இதுவாகும். காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களில், ஜெனி பென் தாகூர் பனஸ்கந்தா தொகுதியிலும், காந்தி நகர் தொகுதியில் சோனல் படேலும் போட்டியிடுகின்றனர்.

குஜராத் மாநிலம்
குஜராத் மாநிலம்

இந்தத் தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார். அம்ரேலி தொகுதியில் ஜெனி தும்மர், தஹோத் தொகுதியில் பிரபா தவியாத் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இதர 2 பெண் வேட்பாளர்கள் ஆவர்.

அம்மாநிலத்தில் அகமதாபாத் மேற்கு, காந்தி நகர், போர்பந்தர், பதான், பஞ்ச்மஹால், கேடா, பரூச், வல்சாத், நவ்சாரி ஆகிய 9 தொகுதிகளில் எந்தவொரு கட்சியிலிருந்தும் இதுவரை பெண் எம்பி-க்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் சுமார் 2.39 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்
பெண்களுக்கு அதிகாரமளித்தல்

இது மொத்த வாக்காளர்களில் 50 சதவீதமாகும். குஜராத்தில் பெண் எம்பி-க்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு போன்றவை பிரதானமாக பேசப்பட்டு வந்தாலும், குஜராத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலில் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதில் தயக்கம் காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in