ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்வீர்களா? பிரதமர் மோடி கூறிய பதில்

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Updated on
2 min read

தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்வாரா என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்புகள் குறித்து அவர் பதிலளித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், “குஜராத்தில், 'மாநிலத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தவர்' என்று ஆய்வாளர்கள் எழுதுவது வழக்கம். இது ஆய்வாளர்களின் வேலை. எத்தனை முறை பதவியில் இருந்தார் என்பதை ஒப்பிட்டு பார்க்க கூடாது. அதற்குப் பதிலாக மோடியின் ஆட்சியில் இந்தியா எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு

மோடி 3 முறை, 5 முறை அல்லது 7 முறை கூட வெற்றி பெறுவார். 140 கோடி இந்திய மக்களின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. அதனால் இது தொடரும்” என்றார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் 'விக்ரம்' தரையிறங்கிய நிலவின் தென் துருவப பகுதியில் உள்ள இடத்துக்கு அரசு 'சிவசக்தி' என ஏன் பெயரிட்டது என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருப்பார்கள்.

நிலவில் சந்திரயான் -3 தரையிறங்கிய சிவசக்தி முனை
நிலவில் சந்திரயான் -3 தரையிறங்கிய சிவசக்தி முனை

அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் தங்கள் குடும்பத்தின் பெயரை சூட்டியிருப்பார்கள். என்னால் அதைச் செய்ய முடியாது" என்றார்.

ஜவஹர்லால் நேரு கடந்த 1947 முதல் 1964 வரை இந்தியப் பிரதமராகப் பணியாற்றினார். 1951 - 52ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலும் அதன் பின்னர் 1957 மற்றும் 1962ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 3 முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

தாமதமாகும் ரெமல் புயல்... கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in