பரபரப்பு... கட்சியில் இருந்து விலகிய ஆளுங்கட்சி எம்எல்ஏ: முதலமைச்சர் அதிர்ச்சி!

பிரேமானந்த நாயக்.
பிரேமானந்த நாயக்.

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து டெல்கோய் தொகுதி எம்எல்ஏ பிரேமானந்த நாயக் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமானந்த நாயக்.
பிரேமானந்த நாயக்.

ஒடிசாவில் டெல்கோய் தனித் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரேமானந்த நாயக். 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மெயில் மூலம் கடந்த அக்டோபர் மாதம் பிரேமானந்த நாயக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கட்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறியுள்ளார். கடந்த அக்டோபர் மாதமே கடிதம் அனுப்பிய போதிலும், இன்றுதான் முறைப்படி அந்த தகவலை பிரேமானந்த நாயக் வெளியிட்டுள்ளார்.

அவர் பதவி விலகுவதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தனுர்ஜெய் சித்து கடந்த 2014 சட்டப்பேரவைத் தேர்தலின்போது டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவுக்கு அவர் சென்றார்.

கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேமானந்த நாயக்கை எதிர்த்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து பாஜகவில் இருந்து வெளியேறிய தனுர்ஜெய் சித்து, ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமானார். அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதை பிரேமானந்தா நாயக் ஏற்கவில்லை.

அத்துடன் தனுர்ஜெய் சித்துவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த பிரேமானந்த நாயக், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in