சுயேச்சைகளுக்குள் சிக்கிக் கொண்ட பலாப்பழம்... எது ஒரிஜினல் பன்னீர்செல்வம் என்று தெரியாமல் வாக்காளர்கள் குழப்பம்!

வாக்களிக்கும் ஓபிஎஸ்
வாக்களிக்கும் ஓபிஎஸ்

ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மூன்று ஓ. பன்னீர்செல்வங்களுக்கு பிறகு நான்காவதாக  உள்ளதால் வாக்காளர்களுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

22 வது பெயராக ஓபிஎஸ்
22 வது பெயராக ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுடன் வாக்குச்சாவடிக்கு சென்ற பெரும்பாலான நபர்களுக்கு அவரது பெயரும் சின்னமும் எங்கே இருக்கிறது என்றே தெரியாததால் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சுயேட்சை வேட்பாளர்களுடன் இருப்பதால் ஓட்டிங் மெஷினில் 22-வது பெயராக உள்ளது. மொத்தம் ஐந்து பன்னீர்செல்வங்கள் அங்கு போட்டியிடுவதால் இவரது பெயருக்கு முன்பாக மூன்று ஓ.பன்னீர் செல்வங்களின் பெயர்களும் இவரது பெயருக்கு பின்னால் ஒரு பன்னீர்செல்வத்தின் பெயரும் உள்ளது. அதனால் இவர்களில் எது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பதை கண்டுபிடிக்க படித்த வாக்காளர்களுக்கேகூட குழப்பம் ஏற்பட்டது. 

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

பெயர் குழப்பம் ஒரு பக்கம் என்றால் சின்னத்திலும் அதைவிட அதிக குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டது. ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு ஓபிஎஸ்ஸுக்கு திராட்சைக் கொத்து சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பலாப்பழம் போன்றே இருப்பதால் எது பலாப்பழம் எது திராட்சை என்று தெரியாத நிலைதான் உள்ளது.

மற்ற மூன்று பன்னீர்செல்வங்களுக்கு வாளி, டம்ளர் மற்றும் புளியங்காய் சின்னங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இவற்றில் பன்னீர்செல்வத்தின் சின்னமான பலாப்பழம் எங்கே இருக்கிறது என்று தேடி வாக்களிப்பது மிகவும் சிரமம்தான்.

கட்சி, சின்னம் ஆகியவற்றை மீட்பேன் என்று கிளம்பியவர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட நேர்ந்துள்ளதும், அதிலும்  ஐந்து ஓபிஎஸ்-களில் ஒருவராக அவரது சின்னம் புதைந்து கிடப்பதும் அரசியலில் அவர் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in