தமாகா முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர்- வேணுகோபால்!

ஜி.கே வாசன்
ஜி.கே வாசன்

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 2 மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை, ஜி.கே.வாசன்
அண்ணாமலை, ஜி.கே.வாசன்

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக, தமாக, அமமுக, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலைச் சந்திக்கின்றன. இதில், பாஜக 19 தொகுதிகள், பாமக 10 தொகுதிகள், அமமுக 2, தமாகா 3, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக நேற்றும், பாமக இன்றும் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி என 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சற்றுமுன்னர் அறிவித்தார்.

அதன்படி ஈரோடு மக்களவைத் தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியின் வேட்பாளர் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என்று ஜி.கே,வாசன் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!

மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!

முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!

ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in