தமிழகத்தில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் கவலையில்லை: கர்நாடக துணை முதல்வர் ஆவேசம்

டி.கே.சிவக்குமார்- முதல்வர் ஸ்டாலின்
டி.கே.சிவக்குமார்- முதல்வர் ஸ்டாலின்

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் கர்நாடகாவுக்கு கவலையே கிடையாது என அம்மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் பணிகள் உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்ப் பாசனத் திட்டங்கள் குறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கர்நாடகா எதிர்கொள்ளும் காவிரி, கிருஷ்ணா, மகதாயி நதிநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சினைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், ’’காவிரி பிரச்சினையில் தமிழக அரசு எப்படி வேண்டுமானாலும் தீர்மானம் நிறைவேற்றலாம். அது பற்றி எல்லாம் நாங்கள் கருத்து சொல்லப் போவது இல்லை. கர்நாடகா மாநில விவசாயிகள் நலனை எங்கள் அரசு பாதுகாக்கிறது.

கர்நாடகாவில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகா வறட்சியை மத்திய குழுக்கள் 3 நாட்களாக ஆய்வும் செய்திருக்கின்றன. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. பெங்களூருவில் கூட நல்ல மழை பெய்தது.

காவிரி நீர்
காவிரி நீர்

இதனிடையே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கையகப்படுத்துவதற்கு மாற்றாக இழப்பீடு வழங்குவதற்காக 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராம்நகர் ஆகிய 4 மாவட்டங்களில் இந்த மாற்று நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேகேதாட்டு அணை கட்டும் இடத்தில் வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்’’ என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in