பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ விட நிதிஷ்குமார் மிகவும் ஆபத்தானவர்: கார்கே விளாசல்

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை விட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மிகவும் ஆபத்தானவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பீகார் மாநிலம், பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் மக்களவைத் தொகுதிகளில் நேற்று தொடர்ச்சியான தேர்தல் பேரணிகளில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றோர். அப்போது அவர் பேசியதாவது:

“பிரதமர் மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையை காட்டி வருகிறார். அவர் சொல்வதையே கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காத ஆர்எஸ்எஸ்-ன் திட்டத்தை செயல்படுத்த பாஜக களமிறங்கியது.

நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கு தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியடைந்தால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்

பீகாரில் எங்கள் கூட்டாளியான தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி தலைவர்) தனது சாச்சாவின் (மாமா) துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நிதிஷ்குமார் விலகியதை ஒரு அதிர்ஷ்டம் என நான் சொல்கிறேன். பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ விட நிதிஷ்குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். அவரிடம் கொள்கைகள் இல்லை. அதிகாரத்துக்காக மட்டுமே நிதிஷ்குமார் கவலைப்படுகிறார்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in