எங்கள் கோரிக்கையை யாரும் ஏற்கவில்லை; தேர்தலை புறக்கணிக்கிறோம்... நீலகிரி தேயிலை விவசாயிகள் விரக்தி

தேயிலை பறிப்பு பணியில் பெண் தொழிலாளர்கள்
தேயிலை பறிப்பு பணியில் பெண் தொழிலாளர்கள்

நீலகிரியில் தேயிலை தூளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது குறித்து எந்த வேட்பாளரும் வாக்குறுதி அளிக்காததால், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதில் சுமார் 70 ஆயிரம் சிறு, குறு விவசாய குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 3 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 24 வருடங்களாக நீலகிரி பசுந்தேயிலைக்கு சரியான கொள்முதல் விலை கிடைக்காமல் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நீலகிரி தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள்
நீலகிரி தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள்

தற்போது நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு ஒரு கிலோவுக்கு ரூ.13 முதல் ரூ.15 வரை மட்டுமே கிடைத்து வருகிறது. ஆனால் பசுந்தேயிலைக்கான உற்பத்தி செலவே ஒரு கிலோவுக்கு ரூ.23 ஆக உள்ளது. இதனால் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தேயிலை விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைக்கு, வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். பசுந்தேயிலைக்கு ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.35 வழங்க கோரி விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

நீலகிரி தேயிலை தோட்டம்
நீலகிரி தேயிலை தோட்டம்

கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில், தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.200 நிர்ணயம் செய்தால் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.40 கிடைக்கும் என முடிவு செய்யப்பட்டது. எனவே இந்த கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் வாக்குறுதி தராவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்தனர்.

நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம்
நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம்BG

ஆனால் வாக்குப்பதிவுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களும், விவசாயிகளின் பிரதான கோரிக்கையான தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.200 நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ள மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தினர் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அச்சங்கத்தின் தலைவர் தும்பூர் ஐ.போஜன் தெரிவித்துள்ளார்.

மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால் நீலகிரியில் வாக்கு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இங்கு திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன், பாஜக சார்பில் எல்.முருகன், நாதக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in