
சிபிஎஸ்இ பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் இனி பாரத் என பெயர் மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என்சிஇஆர்டி குழு ஆய்வு செய்தது. ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்தியாவுக்கு பதில் பாரத் என பெயரை பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பண்டைய வரலாறு என்பதற்கு பதில் செவ்வியல் வரலாறு பாடதிட்டத்தை அறிமுகப்படுத்தவும் என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே ஜி-20 மாநாடு அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதில் பாரத் என பயன்படுத்தப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற பெயர்பலகை வைத்ததற்கும் எதிர்ப்பு எழுந்தது. நாட்டின் பெயரை மாற்ற மோடி அரசு திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாட நூல்களில் பாரத் என மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!
ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!
பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?