பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் நுழையும் ஐந்து போட்டியாளர்கள் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஏழாவது சீசனில் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் நுழைய இருக்கிறார்கள். இதனை கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே வைல்ட் கார்டில் நுழைவார்கள். ஆனால், ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டுக்கு என்ற அறிவிப்பே ரசிகர்களின் ஆச்சரியத்திற்குக் காரணம். 'ராஜா ராணி' சீரியல் மூலமாக புகழ்பெற்ற அர்ச்சனா, கானா பாடகர் கானா பாலா இரண்டு பேர் வைல்ட் கார்டில் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், மீதமுள்ள போட்டியாளர்கள் யார் என்பது குறித்தான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அர்ச்சனா
அர்ச்சனா

அந்த வகையில், 'கலக்கப்போவது யாரு' பாலா, சூப்பர் சிங்கர் புகழ் மானசி, பைக் ரேசர் சாம் சாமுவேல்ஸ், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் நமீதா மாரிமுத்துவின் தத்து மகள் பிரவீனா மாயா ஆகியோரது பெயர் அடிபடுகிறது. இதில் உறுதியானவர்கள் யார் என்பது இந்த வாரம் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in