ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!

தஞ்சை பெருவுடையார் அபிஷேகம்
தஞ்சை பெருவுடையார் அபிஷேகம்

தமிழக வரலாற்றில் மாபெரும் வெற்றிகளை படைத்து தமிழ் ராஜ்ஜியத்தை கடல் கடந்துகொண்டு சென்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது மெய்கீர்த்தியை உலகறியச்செய்யும் வகையில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலும், தஞ்சை மாநகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழ் முறைப்படி திருமுறை பாடல்கள் பாடியப்படி ஓதுவார்கள் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தனர். ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு முறைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில் தேவார திருமுறை பாடல்கள் பாடி பெருவுடையாருக்கு 48 பேரபிஷேக நிகழ்வு நடைபெற்றது. விபூதி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பேரபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராஜராஜ சோழனின் புகழை போற்றும் வகையில் அவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருவுடையார் சிலை முன்பாக ராஜராஜ சோழன் சிலை வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்திருப்பதால் தஞ்சாவூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் சதய விழாவை காண குவிந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in