ஒடிசா சட்டமன்றத் தேர்தல்... மீண்டும் 2 தொகுதிகளில் போட்டியிடும் நவீன் பட்நாயக்!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் இந்த முறையும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இம்மாநிலத்தில் 147 சட்டப் பேரவைத் தொகுதிகளும், 21 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. அங்கு தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அந்த முயற்சி கைகூடாததால், தற்போது தனித்து போட்டியிடுகிறது.

பிஜு ஜனதா தளம்
பிஜு ஜனதா தளம்

இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பிஜு ஜனதா தளம் இன்று வெளியிட்டது. இதில் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மேற்கு ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள காந்தபாஞ்சி தொகுதி மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அவரது பாரம்பரிய ஹிஞ்சிலி தொகுதி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் நவீன் பட்நாயக், பர்கர் மாவட்டம் ஹின்ஜிலி மற்றும் பிஜேபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் நவீன் பட்நாயக் வெற்றி பெற்றார். பின்னர் ஹிஞ்சிலி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டு பிஜேபூரில் ராஜினாமா செய்தார். வரவிருக்கும் தேர்தலில் பூர்ண சந்திர பாகா (சித்ரகொண்டா), கிஷோர் சந்திர நாயக் (குச்சிந்தா), ரஜனிகாந்த் சிங் (அங்குல்), சமீர் ரஞ்சன் தாஷ் (நிமாபரா) ஆகிய 4 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

அதே நேரத்தில் மாற்று கட்சியிலிருந்து வந்த அருந்ததி தேவி (தியோகர்), தில்லிப் குமார் நாயக் (நிமபரா), ராஜேந்திர குமார் சத்ரியா (குச்சிந்தா) மற்றும் லட்சுமிபிரியா நாயக் (சித்ரகொண்டா) ஆகியோருக்கு பிஜு ஜனதா தளம் வரவிருக்கும் தேர்தலில் சீட் வழங்கியுள்ளது.

அங்குல் எம்எல்ஏ- ரஜனிகாந்த் சிங்குக்கு சீட் வழங்காத நிலையில், அந்த தொகுதியில் அவரது மனைவி சஞ்சுக்தா சிங்கை பிஜு ஜனதா தளம் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம்

முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ரபி நந்தாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அவரது மனைவி டாக்டர் இந்திரா நந்தா கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிஜு ஜனதா தளம் இதுவரை 126 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in