மோடி முறையான சடங்குகளை பின்பற்றவில்லை... இந்தியா கூட்டணி ஆட்சியில் ராமர் கோயிலை சுத்திகரிப்போம்; காங்கிரஸ் புது சர்ச்சை

நானா படோல்
நானா படோல்

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வென்று ஆட்சியமைத்ததும், அயோத்தி ராமர் கோயிலுக்கு புதிதாக சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும்’ என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் நாள்தோறும் புதிய சர்ச்சைகள் அணி வகுத்து வருகின்றன. பாஜக - இந்தியா கூட்டணி ஆகியவை எதிரெதிர் முழக்கமாக, இந்த சர்ச்சைகளை தொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் புதிய சர்ச்சைக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் அடித்தளமிட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

இதன்படி, மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், ராமர் கோயிலுக்கு சங்கராச்சாரியர்களை கொண்டு சுத்திகரிப்பு மற்றும் புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருக்கிறார். ”அயோத்தி ராமர் கோயில் ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழாவைச் செய்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி சரியான சடங்குகளைப் பின்பற்றவில்லை” என்று நானா படோல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்து மதத்தின் மூத்த அர்ச்சகர்களான சங்கராச்சாரியார்கள், அயோத்தி ராமர் கோயில் சடங்குகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவித்ததையும் நானா படோல் நினைவூட்டி உள்ளார்.

“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தியில் ராமர் கோயிலை தூய்மைப்படுத்தப் போகிறோம். சங்கராச்சாரியார்கள் அந்த பிரான் பிரதிஷ்டையை எதிர்த்தனர். எனவே நான்கு சங்கராச்சாரியார்களை கொண்டும் ராமர் கோவிலை சுத்தப்படுத்துவோம். அந்த இடத்தில் ராம் தர்பார் அமைக்கப்படும். ராமர் கோயில் கட்டுவதில் நெறிமுறைகளுக்கு எதிராக நரேந்திர மோடி செயல்பட்டார். மதப்பெரியவர்கள் காட்டும் திருத்தங்கள் அடிப்படையில் தேவையான மாற்றங்களை செய்வோம்” என்று நானா படோல் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.

ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாஜக மற்றும் பிரதமர் அதனை புறக்கணித்ததாக நானா படோல் தெரிவித்துள்ளார். ஆனால் ராமர் கோயில் தொடர்பான நானா படோல் கருத்துக்கு அவரது முன்னாள் நண்பர்களே கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் சனாதன எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக அக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமோத் கிருஷ்ணம் அந்த எதிர்ப்பாளர்களில் ஒருவர்.

“இது படு அபத்தமான பேச்சு. பகவான் ராமரின் நாமத்தை உச்சரிப்பதால் ஒருவன் தூய்மையாகிறான். அதன் மூலமே நமது பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன. ஆனால் சுத்திகரிப்பு மூலம் காங்கிரஸ் என்ன சொல்ல விரும்புகிறது?” என்று கிருஷ்ணம் கேள்வி எழுப்பியுள்ளார். சுத்திகரிப்பு பற்றி பேசுவதற்கு முன், ராமர் மீதான வெறுப்பை முதலில் போக்கிக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in