எனது 90 வினாடி பேச்சால் காங்கிரஸ், இந்தியா கூட்டணி பீதியடைந்துள்ளது: பிரதமர் மோடி விமர்சனம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

எனது 90 வினாடி பேச்சை கண்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் பீதியடைந்துள்ளதாக பிரதமர் மோடி புதிய விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "நேற்று முன்தினம் நான் ராஜஸ்தானுக்கு வந்தபோது, 90 வினாடிகள் நீடித்த எனது உரையில் சில உண்மைகளை நாட்டின் முன் முன்வைத்திருந்தேன். இது ஒட்டுமொத்த காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களின் சொத்தை அபகரித்து அதன் சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் ஆழமான சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டு மக்களின் முன் வைத்தேன். அவர்களின் வாக்கு வங்கி அரசியலை அம்பலப்படுத்தினேன். எப்படியிருந்தாலும், காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறது?

கடந்த 2014ல் மோடியை டெல்லியில் பணியாற்ற அனுமதித்தீர்கள். அப்போது யாரும் கற்பனை கூட செய்யாத முடிவுகளை நாடு எடுத்தது. ஆனால் 2014க்குப் பிறகும் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், இன்று என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். காங்கிரஸ் இருந்திருந்தால் ஜம்மு-காஷ்மீரில் இன்றும் நமது படைகள் மீது கற்கள் வீசப்பட்டிருக்கும்.

டோங்க் மாவட்டத்தில் பாஜக பிரச்சார கூட்டம்
டோங்க் மாவட்டத்தில் பாஜக பிரச்சார கூட்டம்

காங்கிரஸ் இருந்திருந்தால் எதிரிகள் எல்லையைத் தாண்டி வந்திருப்பார்கள். காங்கிரஸ் இருந்திருந்தால், நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டிருக்காது. நமது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்காது” என்றார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசிய போது, இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம், மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளை கொண்டிருப்பவர்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது" என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடியாக தனது 90 விநாடி பேச்சால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி பீதியடைந்துள்ளது என பிரதமர் மோடி மீண்டும் புதிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in