மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த புகார்... விசாரணைக்கு அழைத்த போலீசுக்கு எதிராக ஊரே திரண்டதால் பரந்தூரில் பரபரப்பு!

சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்திற்கு வருகை தந்த கிராம மக்கள்
சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்திற்கு வருகை தந்த கிராம மக்கள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக விசாரணைக்கு 10 பேர் அழைக்கப்பட்ட நிலையில், ஊர் பொதுமக்கள் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விமான நிலையத்திற்கு பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

10 பேருக்கு சம்மன் அனுப்பியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை
10 பேருக்கு சம்மன் அனுப்பியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை

குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள், வாக்குப்பதிவை முழுவதுமாக புறக்கணித்தனர். 1,375 வாக்குகள் கொண்ட அந்த வாக்குச்சாவடியில் 12 வாக்குகள் மட்டுமே பதிவானது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் மக்களை வாக்களிக்க வலியுறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கும் வருவாய்த்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன், முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர், சுதாகர், ஓம்பகவதி, விவேகானந்தன் உள்ளிட்ட 10 பேர் மீது சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

சுங்குவார்சத்திரம் காவல் நிலையம்
சுங்குவார்சத்திரம் காவல் நிலையம்

இவர்கள் 10 பேரையும் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் வழங்கி இருந்தனர். இந்நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 10 பேர் உட்பட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு இன்று வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் அனைவரும் வர வேண்டிய அவசியம் இல்லை எனவும், தனித்தனியாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கலாம் எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...


சித்ரா பௌர்ணமி கோலாகலம்... திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்பு... 2500 சிறப்பு பேருந்துகள்!

மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் புறப்பட்டது தேர்... மக்கள் வெள்ளத்தில் திணறும் மாமதுரை!

குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் ரகளை... ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கடும் மோதல்!

நேரடி வரி வசூல் 19,58,000 கோடி ரூபாய்... கடந்த நிதியாண்டில் வரி வசூலில் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in