மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் புறப்பட்டது தேர்... மக்கள் வெள்ளத்தில் திணறும் மாமதுரை!

மதுரை தேரோட்டம்
மதுரை தேரோட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். 

மீனாட்சியம்மன் தேரோட்டம்
மீனாட்சியம்மன் தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களில் இருந்தும் குவிவார்கள். 

அத்தகைய புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 12 ம் தேதியன்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது. மதுரை சித்திரை திருவிழாவின் மிகமுக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையிலிருந்து ஆவலாய் புறப்பட்டு வரும் கள்ளழகர், தங்கையின் திருமணம் முடிந்ததால் ஆற்றில் நீராடிவிட்டு, தங்கையை காணாமலேயே திரும்புவதாக ஐதீகம். 

நேற்று மீனாட்சி கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக இன்று இருவரும் தேரில் உலா வரும் தேரோட்டம் நடைபெறுகிறது.  மீனாட்சி அம்மன் கோயில் தேரடியில் பஞ்ச வாத்தியங்கள் முழக்க மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் சர்வ அலங்காரத்துடன் சமேதராக தேருக்கு எழுந்தருளினர். அதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ள தேரை இழுப்பதில் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டுள்ளனர். மதுரை மாசி வீதிகளில் தேர் பவனி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பதால்  மதுரை மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. எதிர்சேவையில் கள்ளழகர் பவனி வரும் காட்சியைக் கண்டுகளிக்க ஆர்வமுடன் கூடியுள்ளனர்.  மக்கள் பரவசத்துடன் எதிர்பார்த்திருக்கும்  அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை அதிகாலை நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in