அம்மா என்னை நம்பி ஒப்படைத்துள்ளார்... ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த பின் ராகுல் காந்தி உருக்கம்!

ராகுல் காந்தி, சோனியா காந்தி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

”என் அம்மா மிகுந்த நம்பிக்கையுடன் குடும்ப பணியிடத்தின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார்” என ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த பின் ராகுல் காந்தி உருக்கமாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தவிர அவரது பாரம்பரிய தொகுதியான அமேதியிலும் போட்டியிடுவார் என கடந்த சில நாள்களாக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதேபோல், சோனியாவின் பாரம்பரிய தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் இந்த முறை பிரியங்கா காந்திக்கு வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ரேபரேலியில் வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு பூஜையில் பங்கேற்ற ராகுல் காந்தி, குடும்பத்தினர்
ரேபரேலியில் வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு பூஜையில் பங்கேற்ற ராகுல் காந்தி, குடும்பத்தினர்

இந்நிலையில் இந்த இரு விஷயங்களுக்கும் நேற்று பதில் கிடைத்தது. ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவையும் வேட்பாளர்களாக காங்கிரஸ் அறிவித்தது. மேலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராகுல் காந்தி, ரேபரேலியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராகுல் காந்தியுடன் அவரது தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடன் சென்றனர்.

ராகுல் காந்தி ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எதிர்க்கட்சியான பாஜக தரப்பிலிருந்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், தனது குடும்பத்தினர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வது தனக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ’ரேபரேலியில் இருந்து நியமனம் என்பது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம்!

என் அம்மா மிகுந்த நம்பிக்கையுடன் குடும்ப பணியிடத்தின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து, எனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்துள்ளார்.

அமேதி மற்றும் ரேபரேலி எனக்கு வேறுபட்டவை அல்ல. இரண்டுமே எனது குடும்பம். 40 ஆண்டுகளாக இப்பகுதியில் பணியாற்றி வரும் கிஷோரி லால் அமேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இந்தப் போராட்டத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிற்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in