மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது... யோகி ஆதித்யநாத் மகிழ்ச்சி!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

நான்காவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மோடி அலை இப்போது சுனாமியாக மாறியுள்ளது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹைதர்கரில் இன்று பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது, “நான்காவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மோடி அலை இப்போது சுனாமியாக மாறியுள்ளது. மோடி அரசின் குரல் மீண்டும் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நாட்டிலும் உலகிலும் நிகழும் மாற்றங்களுக்கு இன்றைய புதிய இந்தியா சாட்சியாக உள்ளது.

உலகில் நமது மரியாதை அதிகரித்துள்ளது. எல்லைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகள் விரைவான வேகத்தில் முன்னேறியுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் பசியால் இறந்தனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இளைஞர்கள் புலம்பெயர்ந்தனர். ஆனால் பிரதமர் மோடி தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் நாம் கண்ட மாற்றத்துக்கு நாம் அனைவரும் சாட்சிகள்.

கடந்த 4 ஆண்டுகளாக, 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. 12 கோடி விவசாயிகளுக்கு கிசான் சம்மன் நிதி, உஜ்வாலா யோஜனா, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர், கழிப்பறைகள், நான்கு கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கும் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

முகம் அல்லது சாதியைப் பார்க்காமல் மோடி நிறைய கொடுத்துள்ளார். பாரபட்சம் இல்லாமல் நிர்வாகத்தின் பலன்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதற்கு பிரதமர் மோடி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி தேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி தேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ராமர் கோயில் கட்டுவது பயனற்றது என அவர்கள் கூறினர். இந்து மத நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளுடன் விளையாடுவது காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் வழக்கம்.

இவர்கள் தான் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள். பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற்றவர்கள். இந்தத் தேர்தல் ராம பக்தர்களுக்கும் ராம துரோகிகளுக்கும் இடையேயான தேர்தல்." இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in