பிரதமர் மோடி
பிரதமர் மோடி

‘முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மூலம், இந்துமதத்தை காங்கிரஸ் அழிக்கப்பார்க்கிறது’ மோடி சரமாரி சாடல்

இந்து மதத்தை ஒழிப்பதற்கான சதியில் பலவகையிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பாரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் ‘இட ஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய்களைப் பரப்புவதாக’ குற்றம்சாட்டினார்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து பேசிய மோடி, இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நோக்கங்களுக்கு எதிரானது என்றார். மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இந்துக்களுக்கான ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்கிரஸின் மறைமுக செயல்திட்டம் என்றும் இதன் மூலம் இந்து மதத்தை ஒழிக்க அக்கட்சி முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

”கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு அனைத்து முஸ்லிம்களையும் இரவோடு இரவாக ஓபிசி பிரிவில் சேர்த்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. பழங்குடியினர் நலனில் காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை. 1950 - 2015 இடையே மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் பங்கில் 8 சதவீத சரிவும், இஸ்லாமியரில் 43 சதவீதம் அதிகரிப்பும் கண்டுள்ளது” என்றும் பிரதமர் மோடி பேசினார்.

"முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இடஒதுக்கீடு வழங்குவதற்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது என்றுதான் கூறுகிறேன். நாட்டில் உள்ள ஏழைகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் என அனைவரும் அடங்குவர். இடஒதுக்கீட்டின் பலன்களை அனைவரும் பெற வேண்டும். தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நீண்ட காலமாக அநீதியை எதிர்கொண்டுள்ளனர். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் சரியான முடிவை எடுத்ததற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது" என்று பிரதமர் பேசியுள்ளார்.

பாஜக வேட்பாளரும், மக்களவை உறுப்பினருமான டாக்டர் ஹீனா காவிட்டை ஆதரித்து நந்தூர்தாரில் மோடி பிரச்சாரம் செய்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும், மாநில முன்னாள் அமைச்சருமான கே.சி.படாவியை, ஹீனா காவிட் தோற்கடித்தார். இந்த முறை, ஹீனா காவிட் தனது மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in