தேர்தலில் போட்டியிடப் போவதில்லை... மஜத முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி
மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி முடிவு எடுத்துள்ளது.

மாநிலங்களவை
மாநிலங்களவை

நாடு முழுவதும் உள்ள  மாநிலங்களவை உறுப்பினர்கள் 56 பேரின்  பதவிக்காலம்  விரைவில்  முடிவடைய உள்ளது. அதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நான்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் ஐந்தாவதாக ஒரு உறுப்பினரை களம் இறக்கலாமா என பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) முடிவு செய்துள்ளது.

கர்நாடக சட்டசபையில் இருந்து, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரசின் ஹனுமந்தையா, நாசிர் ஹுசேன், சந்திரசேகர், பாஜவின் ராஜிவ் சந்திரசேகர்  ஆகியோரின் பதவிக் காலம் இந்த மாதம் முடிவடைகிறது. இவர்களால் காலியாகும் இடங்களுக்கு, பிப்ரவரி 27-ல் தேர்தல் நடக்கவுள்ளது.

குமாரசாமி
குமாரசாமி

சட்டசபை பலத்தின் அடிப்படையில், காங்கிரஸ் மூன்று, பாஜக ஒரு இடத்தைக் கைப்பற்றலாம். ஆனால்  ஐந்தாவது வேட்பாளரை களமிறக்க, பாஜக - மஜத கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மஜதவின் முன்னாள்  எம்.பி- குபேந்திர ரெட்டியை களமிறக்குவதாக கூறப்பட்டது. ஆனால் மஜத தலைவர்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காண்பிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு தயாராவதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சட்டசபையில் மஜத, 19 உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ளது. அவர்களால் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாது. எனவே வேட்பாளரை களமிறக்க வேண்டாம் என்று அக்கட்சியை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பாஜக இரண்டாவது வேட்பாளரை களமிறக்கினால், அவருக்கு ஆதரவளிக்கவும் மஜத மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in