அமித் ஷாவுடன் மிசோரம் முதல்வர் திடீர் சந்திப்பு!

அமித் ஷாவுடன் மிசோரம் முதல்வர் லால்டுஹோமா சந்திப்பு.
அமித் ஷாவுடன் மிசோரம் முதல்வர் லால்டுஹோமா சந்திப்பு.

மியான்மரில் உள்நாட்டு கிளர்ச்சி முடிவடையும் வரை எந்த அகதிகளும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என மிசோரம் முதல்வர் லால்டுஹோமாவிடம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.

பிரதமர் மோடியை சந்தித்த மிசோரம் முதல்வர்.
பிரதமர் மோடியை சந்தித்த மிசோரம் முதல்வர்.

டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை, மிசோரம் முதல்வர் லால்டுஹோமா இன்று சந்தித்து பேசினார். அப்போது, மியான்மரில் உள்நாட்டு கிளர்ச்சி முடிவடையும் வரை, அங்கிருந்து மிசோரமில் வந்து தஞ்சமடைந்தவர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என லால்டுஹோமாவிடம் அமித் ஷா உறுதியளித்தார்.

மேலும், இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு வெளிநாட்டினரின் பயோ-மெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் எனவும் அமித் ஷா தெரிவித்தார். மிசோரத்தில் முன்னாள் முதல்வர் சோரம் தங்கா, மியான்மர் பிரஜைகளை நாடு கடத்துமாற மத்திய அரசு கூறிய அறிவுறுத்தலுக்கு ஆட்சேபணை தெரிவித்தார்.

மியான்மர் பிரஜைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை நாடு கடத்தமாட்டோம் என்றும், மிசோரம் மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்து அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் என்றும் சோரம் தங்கா தெரிவித்திருந்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மியான்மரில் இருந்து, குறிப்பாக இந்தியாவின் எல்லையில் உள்ள சின் பிராந்தியத்திலிருந்து அகதிகளாக வரும் மக்களின் பயோ-மெட்ரிக் தரவுகளை இனி சேகரிக்கப்போவதில்லை எனவும் கடந்த செப்டம்பர் மாதம் மிசோரம் அரசு முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் அங்கு தேர்தல் நடைபெற்று, சோரம் மக்கள் இயக்கம் சார்பில் லால்டுஹோமா வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். இந்நிலையில், அமித் ஷாவை இன்று சந்தித்த லால்டுஹோமா, "தங்கள் மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதா இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறாமல் உள்ளது" என்று தெரிவித்தார். அதற்கு, “அந்த சட்டத்தில் முதலில் திருத்தங்களை செய்யுங்கள்" என அமித் ஷா தெரிவித்தார்.

அமித் ஷாவை சந்திப்பதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவரை லால்டுஹோமா நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக முதல்வர் பதவி ஏற்றுள்ள லால்டுஹோமாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in