தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு... வாக்களித்த பிறகு சசிகலா பேசியது என்ன?

வாக்களித்த சசிகலா
வாக்களித்த சசிகலா

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு. அவர்கள் போட்ட ஒரு தப்புக் கணக்குக்கு ஒரு முடிவு வரும் என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு. திருந்துவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமையும். அவர்கள் போட்ட ஒரு தப்புக் கணக்குக்கு ஒரு முடிவு வரும். அதனால் வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் எங்களின் காலமாக அமையும்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்துள்ளது. அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேநேரம் அதிமுகவில் வெளியேற்றப்பட்ட ஒபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனின் அமமுக இம்முறை பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் ஓபிஎஸ். டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஓபிஎஸ் தினகரன் இபிஎஸ்
ஓபிஎஸ் தினகரன் இபிஎஸ்

இப்படி இரு மூன்று தரப்பாக அதிமுக உடைந்துள்ள சூழலில், யாரை குறிப்பிட்டு ‘திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு’ என சசிகலா பேசியுள்ளார் என்பது தற்போதைய நிலையில் அரசியல் விவாதமாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in