தமிழக அமைச்சர் வீட்டில் அடுத்தடுத்து சோகம்... தாயைத் தொடர்ந்து தந்தையும் மரணம்!

பெருமாள்சாமி கவுண்டர்
பெருமாள்சாமி கவுண்டர்

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்சாமி கவுண்டர் வயது மூப்பு காரணமாக இன்று  காலமானார்.

அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்
அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்

திருப்பூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை வகிப்பவர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன். இவரது  சொந்த ஊர் வெள்ளக்கோயில் அடுத்துள்ள முத்தூர்.  இங்குள்ள வேலம்பாளையம் பங்களா தோட்டத்தில் அமைச்சரின் தந்தை சா.பெருமாள்சாமி கவுண்டர் (94) வசித்து வந்தார்.

அண்ணா, பெரியார் ஆகியோரின் கொள்கைகளால் திராவிட இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்ட பெருமாள்சாமி கவுண்டர், திராவிட இயக்கத்திற்காக தீவிரமாக உழைத்தவர். திமுகவிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

பெருமாள்சாமி கவுண்டர்
பெருமாள்சாமி கவுண்டர்

அவர் வயது மூப்பு, மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று  காலை 8 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் முத்தூர் வேலம்பாளையத்தில் உள்ள அமைச்சரின் பூர்வீக வீட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2022 மே மாதத்தில் அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள் மறைந்தார்.  இரண்டு ஆண்டு முடிவதற்குள்ளாகவே அவரது தந்தையும் இறந்துள்ளதால் அமைச்சரின் வீட்டில் பெரும் சோகம் நிலவுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in