
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கழுத்து மற்றும் உடல்வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதயம் மற்றும் கழுத்து வலிப்பதாக அவர் கூறிய நிலையில், அந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!