இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு... மதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு வைகோ பேச்சு!

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு எனவும் தமிழர்களின் முதல் துரோகி இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தான் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் வெளியிட்டதோடு வைகோ 75 சாரம்சங்கள் கொண்ட அறிக்கையை முழுமையாக வாசித்தார்.

மதிமுக தேர்தல் அறிக்கையில் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு, தமிழ் ஆட்சி மொழி, திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், மொழித் திணிப்பு எதிர்ப்பு ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நதிநீர் இணைப்பு, தமிழ்நாடு ஆறுகள் சுத்திகரிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரத் தடை, கூடங்குளம் அணு உலையை மூடுதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவைத் தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழக முதல்வர் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக எடுத்து செல்கிறார். திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், மதிமுகவிற்காக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

மேலும், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா கூட்டனி தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகிறது. நாடு முழுவதும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று வேண்டுமென்றால் அவர்கள் கூறிக் கொள்ளலாம்.

இலங்கை ஒரு ஒரு சுண்டைக்காய் நாடு. இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தான் தமிழ் இனத்தின் முதல் எதிரி. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது தான் கச்சத்தீவு. அன்றைய காலகட்ட நெருக்கடி காரணமாக மத்திய அரசு கச்சத்தீவை கொடுத்த போது முழுமையாக எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி” என்றார்.

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், “கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனிச் சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் தான் தீப்பெட்டியை தேர்தெடுத்தோம். தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் மோசடி செய்து விட்டது. 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே 6 ஆக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டு விட்டது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   


ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு...ஏப்ரல் 26-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in