ஊழியர்களுக்குப் பணம் கொடுத்த மேயர்... திட்டிய ஆணையர்; கரூர் மாநகராட்சியில் பரபரப்பு!

போராட்டம் நடத்தியவர்களிடம் பணம் கொடுக்கும் திமுக மேயர் கவிதா
போராட்டம் நடத்தியவர்களிடம் பணம் கொடுக்கும் திமுக மேயர் கவிதா

தொகுப்பூதிய பணியாளர்களை ஒருமையில் பேசுவதாகவும் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்வதாகவும் கரூர் மாநகராட்சி ஆணையாளர் மீது குற்றம்சாட்டி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கரூர் மாநகராட்சியில் தொகுப்பூதியம் பெரும் பணியாளர்கள் 150 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் முறையான பயிற்சி பெற்றவர்கள் அல்ல என்றாலும் தேவைக்கேற்றவாறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் கரூர் மாநகராட்சி ஆணையராக சுதா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இங்கு வந்த பிறகு தொகுப்பூதிய பணியாளர்கள் விஷயத்தில் கடுமையாக நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தது.

கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி

பணி நேரத்தில் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், வேலை நேரத்திற்கும் கூடுதலாக பணியாற்ற கட்டாயப்படுத்து வதாகவும், ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதாகவும் சுதா மீது ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், தொகுப்பூதிய பணியாளரான ராஜசேகரி என்பவரை ஆணையர் சுதா நேற்று மாலை திடீரென பணியிடை நீக்கம் செய்திருக்கிறார். தீபாவளி பண்டிகையின் போது மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இனிப்பு, கார வகைகளுக்கான பில்களை தயாரித்ததில் பிழைகள் இருப்பதாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இடை நீக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா, மாநகர மேயர் கவிதா
கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா, மாநகர மேயர் கவிதா

இதனிடையே முந்தைய நகராட்சி ஆணையர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தொகுப்பூதிய பணியாளர்கள் மீதான வன்மத்தின் காரணமாகவும் சுதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக கூறி தொகுப்பூதிய பணியாளர்கள் இன்று திடீரென மாநகராட்சி அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த திமுக மேயர் கவிதா, பிரச்சினை குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கடிந்து கொண்டார். அத்துடன் உடனடியாக கலைந்து செல்லுமாறு அவர்களைக் கேட்டுகொண்ட மேயர், தனது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து போராட்டத்தில் இருந்த பணியாளர்களிடம் கொடுத்து போராட்டத்தை கைவிடுமாறு சொன்னார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜசேகரி
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜசேகரி

ஆனால், மேயர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து ஊழியர்கள் கோபமாகப் பேசியதால், மேயரும் அங்கிருந்து கோபமாக கிளம்பிச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து ஆணையர் சுதாவும் ஊழியர்களை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் தொகுப்பூதிய பணியாளர்களின் போராட்டம் நீடித்து வருவதால் மாநகராட்சிப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in