ஆளுநர் வருகைக்கு திருச்சியில் எதிர்ப்பு... மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது!

மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

தமிழக ஆளுநரின் திருச்சி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மற்றும் கருமண்டபம் தேசிய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சி வருகை தர உள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் தமிழக நலனுக்கு எதிராக இருப்பதாகவும், தெய்வப் புலவர் திருவள்ளுவரை கொச்சைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, ஆளுநர் செல்லும் திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் திருவானைக்காவல் பகுதியில் பரப்பரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in