வேலூரை கொடைக்கானல் போல பசுமையாக்குவேன்... மன்சூர் அலிகானின் ஜில்ஜில் வாக்குறுதி!

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் ஒலிபெருக்கியின் மூலம் நாட்டு மருந்து விற்று, இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்தியில் ஆளுபவர்கள் கெட்டவர்களாக இருப்பதால் அதைவிட நல்ல கெட்டவனாக நான் இருப்பேன் என்னை தேர்ந்தெடுங்கள் எனக்கு வாக்களியுங்கள்” என்றார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அடுத்த பொய்கை பகுதியில் இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அங்கு சந்தையில் இருந்து மாடு, கன்றுக்குட்டிகளை கட்டித் தழுவி கொஞ்சினார். பின்னர், அந்த பகுதியில் நாட்டு மருந்து விற்பனை கடைக்கு சென்று ஒலிபெருக்கியின் மூலம் நாட்டு மருந்துகளின் பெயர்களை கூறி விற்பனையில் ஈடுபட்டார். முன்பு அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகச் சொன்னார் மன்சூர். பின்பு அவரது கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக சிலர் அறிக்கை விட்டனர்.

இந்த நிலையில், அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியிருப்பதாவது, “சிறுபான்மையர்களின் ஓட்டு இல்லை என்றால் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது. உலகத்தின் ஜனநாயக தொட்டில் என்று அழைக்கப்படுவது தமிழ்நாடு தான். மதத்தை வைத்து யாராவது ஒற்றுமையை குலைக்க நினைத்தால், அதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

மேலும், “வேலூர் மாவட்டத்தில் மலைகள் அதிகமாக இருப்பதால் கொடைக்கானலில் இருப்பது போல் மரங்களை கொண்டு வந்து நட்டு மலைகளை பசுமையாக்க வேண்டும். எனக்கு மூன்று கொள்கைகள் உண்டு. எனது தாயின் பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து குறைந்தது 4 லட்சம் பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வட்டி இல்லாத கடன் கொடுக்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி ஏரிகளில் தண்ணீரை தேக்கி பசுமையாக மாற்றுவேன்.

மத்தியில் ஆளுபவர்கள் கெட்டவர்களாக இருப்பதால் அதைவிட நல்ல கெட்டவனாக நான் இருப்பேன் என்னை தேர்ந்தெடுங்கள் எனக்கு வாக்களியுங்கள். அதேபோல, பத்தாம் வகுப்பு பொது தேர்வு குளிர்காலங்களில் வைக்க வேண்டும்” என்று வாக்குறுதிகளையும் கோரிக்கைகளையும் அடுக்கியவர் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஏற்கனவே இரண்டு முறை தோல்வி அடைந்த A.C சண்முகத்தை மீண்டும் வெற்றிகரமாக தோற்கடிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in