மோடிக்கு பிடித்த உணவை சமைத்துத் தருவேன்: சர்ச்சையாகும் மம்தா பானர்ஜியின் பேச்சு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த உணவை சமைத்து தருவேன். ஆனால், அதனை அவர் ஏற்றுக்கொள்வாரா என தெரியவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டார்.

அப்போது, கடந்த மாதம், ராம நவமி விரத காலத்துக்கு முன்பாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிட்டதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததை குறிப்பிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

பிரச்சாரத்தின் இடையே மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவ் (கோப்பு படம்)
பிரச்சாரத்தின் இடையே மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவ் (கோப்பு படம்)

குறிப்பாக, உணவு சுதந்திரம் குறித்து பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசினார். அந்த பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், “நான் சிறு வயதிலிருந்தே சமைத்து வருகிறேன். எனது சமையலை மக்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் மோடி ஜி எனது உணவை ஏற்றுக்கொள்வாரா? அவர் என்னை நம்புவாரா? அவருக்கு பிடித்ததை நான் சமைப்பேன்.

தோக்லா போன்ற சைவ உணவுகள், மச்சர் ஜோல் (மீன் குழம்பு) போன்ற அசைவ உணவுகள் இரண்டையும் நான் விரும்புகிறேன். இந்துக்களில் பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் தங்களுக்கென்று தனித்துவமான சடங்குகள் மற்றும் உணவுப் பழக்கங்களைக் கொண்டுள்ளன.

ஒரு தனி மனிதனின் உணவுப் பழக்கத்தின் மீது ஆணையை திணிக்க பாஜக யார்? இந்தியா மற்றும் அதன் மக்களின் பன்முகத்தன்மை, அனைவரையும் அரவணைப்பது குறித்து பாஜக தலைமைக்கு சிறிதும் யோசனையும், அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.” என்று அவர் பேசினார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த பேச்சை, எதிர்க்கட்சியினர் சர்ச்சையாக்கி, அவருக்குப் பதிலடி கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், திரிபுரா ஆளுநருமான ததகதா ராய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மோடிக்கு தான் சமைத்த மீன் மற்றும் உணவை அளிக்க மம்தா பானர்ஜி விரும்புகிறார்.

சைவம், அசைவம்
சைவம், அசைவம்

நல்ல முன்மொழிவு. ஆனால் அதற்கு முன், அவர் தனது கட்சியைச் சேர்ந்த பிர்ஹாத் ஹக்கீமிற்கு (கொல்கத்தா மேயர்) ஏன் பன்றி இறைச்சியை வழங்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், பாஜக தலைவர் சங்குதேப் பாண்டா கூறுகையில், “இது பிரதமரை சிக்க வைப்பதற்கான அவரது தந்திரமே தவிர வேறில்லை. ஒருபுறம், பிரதமர் மீன் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடமாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.

ஒவ்வொருவரும் அவரவர் விரும்பி உண்பதை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி நம்புகிறார் என்றால், ஒருவருடைய உணவுப் பழக்கம் பற்றி மோடிஜியின் கருத்துகளை ஏன் திரிக்கிறார்? மம்தா பானர்ஜி பக்தியுள்ள சனாதன இந்துக்களை அவமதிக்கிறார்" என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிகாஷ் பட்டாச்சார்யா கூறுகையில், “அவர்கள் சகோதரர் மற்றும் சகோதரி என்பதால், மம்தா தீதி நிச்சயமாக பிரதமருக்கு உணவு சமைத்துத் தர முடியும். ஆனால், அவரை (பிரதமர் மோடி) சமாதானப்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in