'வங்கத்தில் பாஜகவுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கைகோத்துள்ளன’ - இந்தியா கூட்டணி மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தியா கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மேற்கு வங்கத்தில் பாஜகவுடன் கைகோத்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த, தேசிய அளவில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் பல்வேறு மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அணி திரண்டன. எனினும் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில் இந்த கூட்டணியிடையே சுமூகம் ஏற்படவில்லை. இதனால் இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டாகவும், சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவே தனித்து வேட்பாளரை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி இல்லை. இந்தியா கூட்டணி என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் நான் முக்கிய பங்கு வகித்தேன்.

கூட்டணியின் பெயரையும் நானே வைத்தேன். ஆனால் இங்கே மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் பாஜகவுக்காக வேலை செய்கின்றன. நீங்கள் பாஜகவை தோற்கடிக்க விரும்பினால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம்” என்று பேசினார்.

இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி (இடது)
இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி (இடது)

முன்னதாக மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார். இருப்பினும் காங்கிரஸ் தலைமை, மம்தா பானர்ஜியை சமரசம் செய்ய முயற்சித்தது.

இந்நிலையில் தற்போது இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in