கிரிக்கெட்டிலும் காவிமயமா?... மம்தா பானர்ஜி கண்டனம்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளை காவி மயப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசு தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியின்போது அணியும் ஜெர்சியை காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய கொல்கத்தாவில் உள்ள போஸ்டா பஜாரில் ஜெகத்ரி பூஜையை தொடங்கி வைத்து அவர் பேசினார். " நமது இந்திய கிரிக்கெட் வீரர்களால் நாடு பெருமைப்படுகிறது. அவர்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்வார்கள். ஆனால் பாஜகவினர் அங்கும் காவி நிறத்தை கொண்டு வந்துவிட்டார்கள். தற்போது நமது கிரிக்கெட் வீரர்கள் காவி நிற ஜெர்சியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மெட்ரோ ரயில் நிலையத்திலும் காவி நிறத்தை அடித்து வைத்துள்ளார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சிலைகளை அகற்றுவதில் அவர்களுடன் எனக்கு எந்தவித சிக்கலுமில்லை. ஆனால் அனைத்தையும் அவர்கள் காவிமயமாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள். ஒருகாலத்தில் மாயாவதி தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு அதுபோன்ற செய்திகளை கேள்வியுறவில்லை. இதுபோன்ற நாடகங்கள் பயன்தராது. 

அதிகாரம் வரும், போகும். நாடு மக்களுக்கு சொந்தமானது. அது பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்தமானதல்ல. மத்திய பாஜக விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறது. ஆனால் நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னர் நான் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக போராடினேன். 

தற்போது டெல்லியில் அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து போராடுகிறேன். மேற்கு வங்கத்தில் உலகளாவிய வணிக மாநாடு நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசின் செயல்பாடுகளால் 70 ஆயிரம் தொழிலதிபர்கள் நாட்டில் முதலீடு செய்வதிலிருந்து வெளியேறி விட்டனர்" என்று மம்தா பானர்ஜி பேசினார்.


இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in