தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திரிணமூல் காங்கிரஸ்... மம்தாவின் வாக்குறுதிகள் என்ன?

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தனது அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்ஆர்சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 'தீதியின் உறுதிமொழிகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தத் தேர்தல் அறிக்கையில், மொத்தம் 10 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில், தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 400 தினசரி ஊதியத்துடன் 100 நாள் வேலைக்கான உத்தரவாதம்.

அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவச வீட்டுவசதி. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 இலவச எரிவாயு சிலிண்டர்கள். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வீட்டு வாசலில் இலவச ரேஷன் விநியோகிக்கப்படும் ஆகிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், எஸ்சி / எஸ்டி பிரிவினரின் உயர்கல்விக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்படும். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.
பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை நிலைப்படுத்த நிதி, 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்களுக்கு பயிற்சி. சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி
திரிணமூல் காங்கிரஸ் கட்சி

என்ஆர்சி நிறுத்தப்படும். நாட்டில் பொது சிவில் சட்டம் இருக்காது. நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான கன்னியஸ்ரீ போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளை திரிணமூல் காங்கிரஸ் வழங்கியுள்ளது. இந்த வாக்குறுதிகள் பெங்காலி, ஆங்கிலம், இந்தி, உருது, நேபாள், சந்தால், ஆல் சிகி ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in