மோடி போன்ற ஒரு தலைவர் வேண்டுமென பாகிஸ்தானும் விரும்புகிறது... ம.பி முதல்வரின் மகிழ்ச்சி பேச்சு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

’மோடியைப் போன்ற ஒரு தலைவர் தங்களுக்கும் வேண்டுமென பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக’ பிரதமர் மோடிக்கு புகழாரம் சூடியிருக்கிறார் மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ்.

பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகள் கூட மோடி போன்ற ஒரு தலைவர் தங்கள் நாட்டுக்கு வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அங்கே உயிர் வாழ்வதற்கான நெருக்கடி நீடிப்பதால் அவர்கள் அப்பகுதியை இந்தியாவின் அங்கமாக மாற்ற விரும்புகிறார்கள் என்றும் மோகன் யாதவ் கூறினார். மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது மாநில முதல்வர் மோகன் யாதவ் இவ்வாறு பேசினார்.

மத்திய பிரதேச மாநில முதல்வர்  மோகன் யாதவ்
மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ்

“பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் நரேந்திர மோடி, பாகிஸ்தானில் இருந்திருக்க வேண்டுமென தொடர்ந்து கூறி வருகின்றனர். நீங்கள் ஒரு தலைவராக இருப்பின், உங்கள் எதிரி கூட உங்களைப் புகழ்ந்து பேசும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகையில் நமது பிரதமர் நம்மை பெருமைப்படுத்துகிறார்” என்று மோகன் யாதவ் புகழ்ந்திருக்கிறார்.

மோடியை புகழ்வதன் அடுத்தக்கட்டம் காங்கிரஸ் கட்சியை சாடுவது என்பதால், சட்டப்பிடிவு 370ஐ முன்வைத்து காங்கிரஸைத் தாக்கினார் மோகன் யாதவ். ”சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது, ​​அது நடந்தால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று காங்கிரஸ் பயமுறுத்தியது. 370வது பிரிவின் களங்கம் துடைத்தெறியப்பட்டதை அதன் பின்னர் முழு நாடும் கொண்டாடுகிறது. காஷ்மீர் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மோடியுடன் மோகன் யாதவ்
மோடியுடன் மோகன் யாதவ்

காஷ்மீர் பிரச்சினை மட்டுமல்ல, காங்கிரஸ் விதைத்த விதைகளே இந்தியா பிளவுறவும் காரணமானது. நமது நாட்டை பாரத் மற்றும் பாகிஸ்தானாகப் பிரித்ததில் காங்கிரஸின் களங்கம் ஒளிந்திருக்கிறது. நாடு பிரிந்த நேரத்தில் பாஜகவோ ஜனசங்கமோ இல்லை. காஷ்மீர் மட்டுமல்ல பஞ்சாப்பின் பாதியும் பாகிஸ்தானுக்கு போய்விட்டது” என்றும் மபி முதல்வர் மோகன் யாதவ் கூறியுள்ளார்.

இந்தி பேசும் மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பாஜகவுக்கு என மிகப்பெரும் வாக்கு வங்கி இருக்கிறது. அவற்றை சிந்தாமல் சிதறாமல் சேகரிக்க பாஜக விரும்புகிறது. அதன் பொருட்டு பாஜக ஆளும் அந்த மாநிலத்தில் மோடிக்கு புகழ் சேர்க்கும் பிரச்சார கூட்டங்கள் சூடு பிடித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in