பாஜக நிச்சயம் 305 இடங்களில் வெல்லும்... அடித்துச் சொல்லும் அமெரிக்க அரசியல் அறிவியலாளர்!

மோடி
மோடி

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைக்கும் என்றும், 305 இடங்களை திடமாக வெல்லும் என்றும் அமெரிக்க அரசியல் அறிவியலாளர் இயன் ப்ரெம்மர், என்டிடிவி-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

’ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்’ நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனர் ப்ரெம்மர், உலகளாவிய அரசியல் கண்ணோட்டத்தில் இந்தியாவின் பொதுத் தேர்தல் நிலையானதாகவும், சீரானதாகவும் இருக்கிறது என பாராட்டு தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு தொடர்பான தனது கணிப்புகளை வெளியிட்ட ப்ரெம்மர், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தீர்மானமாக தெரிவித்துள்ளார்.

ப்ரெம்மர்
ப்ரெம்மர்

”பாஜக சுமார் 305 இடங்களை வெல்லும் என்று யூரேசியா குழு ஆய்வு தெரிவிக்கிறது” என்று ப்ரெம்மர் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 10 தொகுதிகள் முன்பின்னாக இந்த வெற்றி அமையலாம்; அதாவது பாஜக வெற்றி எண்ணிக்கை 295 - 315 இடையே அமையும் என ப்ரெம்மர் நிறுவனத்தின் கணிப்பு தெரிவித்துள்ளது.

2014 தேர்தலில் 282 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்திருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இந்த வெற்றி 336 என்பதாக அமைந்திருந்தது. இதுவே 2019-ல் பாஜக 303 தொகுதிகளிலும், தேஜகூ 353 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது ப்ரெம்மர் தந்திருக்கும் கணிப்புகள், 2019 தேர்தல் முடிவுகளை ஒட்டியே வருகின்றன. பிரசாந்த் கிஷோர் போன்ற இந்தியாவின் பிரபல அரசியல் வியூகவாதிகளும் முன்னதாக இதையே உறுதி செய்திருந்தனர்.

உத்தரபிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி
உத்தரபிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி

ப்ரெம்மரின் கணிப்பு தேர்தல் முடிவுக்கு அப்பாலும் நீண்டுள்ளது. "உலகில் உள்ள அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கொண்ட இந்தியா, சுமூகமான மாற்றத்தைக் கொண்டுள்ளது. அதன் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான இந்திய தேர்தல் செயல்முறை பாராட்டுக்குரியது. அடுத்தக்கட்டமாக இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்தாலும், அடுத்தாண்டு உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும், 2028-ல் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்" என்றும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in