எதிர் கட்சியினர் தனது கண்ணை குத்திவிட்டதாக சீன் போட்ட பாஜக வேட்பாளர்... விசாரணையில், பாஜக தம்பியே குத்தியது அம்பலம்!

கண்ணில் காயத்துடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார்
கண்ணில் காயத்துடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார்

கேரளாவில் எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பாஜக வேட்பாளர் குற்றம் சாட்டிய நிலையில், உடன் இருந்த பாஜக நிர்வாகி கைதவறி அவரது கண்ணில் சாவி பட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதையொட்டி அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கொல்லம் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபல நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார்.

கிருஷ்ணகுமாரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்
கிருஷ்ணகுமாரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்

நேற்று முன்தினம் அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். முலவனா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தனது கண்ணில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

திருச்சூர் பூரம் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தபோது சிபிஎம் கட்சியை சேர்ந்த நபர், கூரான ஆயுதத்தால் தன் மீது தாக்குதல் நடத்தியதில் காயம் ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக குந்தாரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வேட்பாளர் கிருஷ்ணகுமார் பகிர்ந்த பதிவு
வேட்பாளர் கிருஷ்ணகுமார் பகிர்ந்த பதிவுBG

தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடிப்படையில் இந்த ஆய்வினை மேற்கொண்டபோது, வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு காயம் ஏற்பட்ட போது அருகில் இருந்த சனல் என்ற நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது சனல் பாஜக கட்சியைச் சேர்ந்த குந்தாரா பஞ்சாயத்து கமிட்டி உறுப்பினர் என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முலவனா பகுதியில் கிருஷ்ணகுமாரை வரவேற்க சென்றபோது, தனது கையில் இருந்த சாவி எதிர்பாராத விதமாக அவர் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சனல் காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

வேட்பாளரை காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சனல்
வேட்பாளரை காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சனல்BG

பொய்யான குற்றச்சாட்டை கூறி தேர்தலை சீர்குலைக்க கிருஷ்ணகுமார் முயற்சி செய்ததாக தற்போது சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in