தமிழகத்தில் சகோதரர் ராகுல்; கேரளாவில் தோழர்களுக்கு ஆதரவு... திமுக முடிவால் அதிரும் காங்கிரஸ்!

கேரளா மாநிலம் இடுக்கியில் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்
கேரளா மாநிலம் இடுக்கியில் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்

கேரளாவில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களுக்கு திமுக ஆதரவளித்துள்ளது, கேரள காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடதுசாரிகளும் அங்கம் வகிக்கின்றன. ஆனால், கேரளாவில் இடதுசாரி முன்னணியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக களமிறங்கி உள்ளன. இதனால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்-ராகுல் காந்தி
கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தியை, தலைமை ஏற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், தான் யாரையும் சகோதரர் என்று அழைப்பதில்லை எனவும், ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தனது மூத்த சகோதரர் என அழைப்பதாக ராகுல் காந்தியும் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்டாலின்னுத் தருவதற்காக சாலைத் தடுப்பை தாண்டி சென்று இனிப்பு வகைகளை வாங்கிய ராகுலின் வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவியது.

கேரள மாநிலத்தில் சிபிஎம், காங்கிரஸ் தனித்தனியாக போட்டி
கேரள மாநிலத்தில் சிபிஎம், காங்கிரஸ் தனித்தனியாக போட்டி

இதெல்லாம் ஒருபுறமிருக்க, கேரளாவில் திமுக எந்தக் கூட்டணியை ஆதரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடுக்கி தொகுதியின் பல பகுதிகளில் சிபிஎம் வேட்பாளருக்கு வாக்குக் கேட்டு திமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது, கேரள காங்கிரஸாரை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. அந்த பேனர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படமும் இடம்பெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள உள்ள இடுக்கி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஜோய்ஸ் ஜோர்ஜை ஆதரித்து இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்பி-யான டீன் குரியக்கோஸ் வேட்பாளராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in